
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த நட்பு இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, அது காதலாக மாறியுள்ளது. மேலும் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அதிக நேரம் போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவன் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய தொடர் வற்புறுத்தலின் காரணமாக மாணவி வீடியோ காலில், ஆடைகளின்றி தோன்றி பேசி வந்துள்ளார். இதே போன்று மாணவன் அடிக்கடி மாணவியிடம் வீடியோ கால் பேசி வந்துள்ளார். அப்போது மாணவி ஆடைகளின்றி தோன்றும்போது அதனைத் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வந்திருந்திருக்கிறார்.
பின்னர் அதனைத் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது சம்பந்தப்பட்ட மாணவிக்கு தெரியவர, அவர் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், குன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.