கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்து சாத்தப்பாடி கிராமத்தில் விஜயகுமார் கிருஷ்ணவேணி தம்பதியினர் மகன் ஜெகதீஷ். இவர் சாத்தப்பாடி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தந்தை விஜயகுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்ததைத் தொடர்ந்து தற்போது தாயின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறான். சிறுவன் அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். அவர் குடித்த பத்து நிமிடத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்ததாகவும் அதனைக் கண்ட பொதுமக்கள் ஜெகதீஷ் அம்மாவிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பத்து ரூபாய் மேங்கோ கூல்டிரிங்ஸ் குடித்து மயங்கி விழுந்த ஜெகதீஷ் சுயநினைவு இல்லாமல் இருந்ததைக் கண்ட அவரது தாயார் கண்ணீருடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜெகதீஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், பின்பு ஜெகதீஷை சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர் அவர் குடித்த பத்து ரூபாய் மேங்கோ கூல்டிரிங்ஸ்சை பரிசோதனை செய்ததில் அந்தப் பாட்டிலில் சோடியம் கார்ப்பரேட் வேதியல் கலந்திருப்பதாகவும் அதனால் அந்த கூல்ட்ரிங்ஸ் ஃபுட் பாய்சனாக மாறியிருப்பதாகவும் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை கூறினர்.
பின்பு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஜெகதீஷ் தற்போது மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் தற்போது இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்து ஜெகதீசன் தாயார் கிருஷ்ணவேணி, என் பிள்ளைக்கு ஏற்பட்ட இந்த விபரீதம் இனி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ் பாட்டிலைத் தடை செய்ய வேண்டும் எனவும், தன் கணவர் இறந்து ஆறு வருடங்களாக என் பிள்ளையும் நானும் தனியாக தான் வாழ்ந்து கொண்டு வருவதாகவும், என் பிள்ளை ஜெகதீஷ் பள்ளியில் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் தான் எடுத்து வருவார் தற்போது என் பிள்ளை சில நாட்களாகப் பள்ளிக்குச் சொல்லவில்லை. இதனால் என் பிள்ளையின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது, தனது பிள்ளை எழுந்து கூட தற்போது நடக்கவில்லை தொடர்ந்து ஜெகதீஷ் வாந்தி மயக்கம் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
ஜெகதீஷின் தாயார் சிறுவன் குடித்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலீன் அச்சடிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அழைத்து தனது மகன் உங்களுடைய நிறுவனத்தின் கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து தற்போது அவனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று தகவல் தெரிவித்த பிறகு தொடர்ந்து மூன்று முறை சிறுவனை நலம் விசாரித்த நிறுவனம் நான்காவது முறை கம்பெனி நிறுவனம் அவரது போனை துண்டிக்க ஆரம்பித்தது. பின்பு மற்றவர்கள் தொலைப்பேசியில் இருந்து அழைத்தால் மட்டுமே எடுத்துப் பேசும் நிறுவனம் என்னுடைய தொலைப்பேசியில் இருந்து அழைத்தால் நிறுவனம் எடுக்கவில்லை என்றும் சிறுவனின் தாயார் நிறுவனத்தில் பேசிய ஆடியோ தகவலை வெளியிட்டார்.
தற்போது இதுகுறித்து கமாபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.