Published on 26/12/2018 | Edited on 26/12/2018
அரசு மருத்துவமனைகளின் தவறால், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கர்ப்பிணி முத்து, தனக்கு தீங்கிழைத்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை கொடுத்த கமுதி திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.