Skip to main content

கையில் வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டார் எல்.முருகன்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

bjp vel yathirai tamilnadu bjp leader l murugan

 

வேல் யாத்திரையைத் தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டார் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.

 

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,  நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை, வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

 

வேல் யாத்திரைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண் தமிழக கரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், நாளை தொடங்க உள்ள பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

bjp vel yathirai tamilnadu bjp leader l murugan

 

இந்நிலையில், பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

திருத்தணி கோயில் முன் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணிக்கு வரும் பா.ஜ.க.வினரை கைது செய்வதற்காக 20 பேருந்துகளை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்குகிறோம். கடவுள் முருகனுக்கு யார் யார் எதிராக இருக்கிறார்களோ அவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை. கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க.வும். ஸ்டாலினும் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

bjp vel yathirai tamilnadu bjp leader l murugan

 

அதைத் தொடர்ந்து, வேல் யாத்திரைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக வாகனத்தில், வேல் யாத்திரையைத் தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டார் எல்.முருகன்.

 

இந்த வேல் யாத்திரையில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களான ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்