Skip to main content

தொடர் மழை காரணமாக சாய்ந்த மரத்தை, மறு நடவு செய்து உயிரூட்டிய அதிகாரிகள்! 

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
gr

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியங்குப்பத்தில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தினுள் உள்ள  வேப்பமரம், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால்  வேரோடு சாய்ந்தது. இதனை அறிந்த நகராட்சி ஆணையர், மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறு நடவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதையடுத்து சென்னையை சேர்ந்த ஜெயம் டிரான்ஸ் பிளேட்டிங் என்ற தனியார் கம்பெனி மூலம், அம்மரத்தின் வேர்கள் மற்றும் கிளைகளுக்கு, மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து திரவியங்கள் தடவி மறு நடவு செய்தனர்.

 

இதனால் அம்மரம் சுமார் 40 நாட்களுக்கு பிறகு மறு வளர்ச்சி அடைவது மட்டுமில்லாமல்,  மரங்களை பாதுகாப்பது அவசியம் என்று பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் எனும்  நோக்கத்தில் மரம் மறு நடவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

 

சார்ந்த செய்திகள்