Skip to main content

"குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்"- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

 

BJP PARTY Vanathi Srinivasan MLA

 

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணிச் செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "விருதுநகரில் ரெடிமேட் ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

 

இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கிவிட வேண்டும். இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். 

 

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழல் உருவாகவில்லை என்பதையே, விருதுநகரில் நடந்த இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. எனவே பாதிக்கப்படும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழலை காவல்துறையும், தமிழக அரசும் உருவாக்க வேண்டும். இனி இதுபோன்ற கொடூரங்கள் நடக்காதவாறு உறுதியான நடவடிக்கைகளை காவல்துறையும், தமிழக அரசும் எடுக்க வேண்டும்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்