அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதிலிருந்து சனாதனம் குறித்த பேச்சுக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் சனாதன சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அரசியல் சாசன பிரகாரம் பதவி ஏற்றுக்கொண்டு நாம் ஒரு அமைச்சராக பேசுகிறோம். பதவி ஏற்கும் பொழுது ரொம்ப கிளியராக சொல்கிறார்கள். ஒரு மக்களுக்கும் மற்றொரு மக்களுக்கும் வேற்றுமை வரும் அளவிற்கு பேசக்கூடாது. அமைச்சராக இருக்கக் கூடியவர்கள் பொறுப்பு அது என்ற வாக்குறுதியை எடுத்துக்கொண்டுதான் அமைச்சர் ஆகிறோம். அப்படி இருக்கும் பொழுது என்னதான் நம்முடைய கொள்கை என இருந்தாலும் அரசியல் சாசன சட்டத்தின் பிரகாரமும் பதவியேற்பின் படியும் ஏதோ ஒரு மதத்தை நான் ஒழிக்க போகிறேன் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
முக்கியமாக ஒரு அமைச்சருக்கு இல்லவே இல்லை. அதுவும் நீங்கள் ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு ஒழிக்கப் போகிறேன் என்று சொல்கிறீர்கள் என்றால் ரொம்ப தப்பு. அவர் சொன்ன வார்த்தை ஊடகங்களிடம் ரெகார்ட் இருக்கிறது. இது சனாதன எதிர்ப்பு மாநாடு இல்லை என்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால் இது சனாதனத்தை ஒழிக்கின்ற மாநாடு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்கிறார். ஒரு அமைச்சர் குறைந்தபட்சம் நீங்கள் எடுத்த பதவியேற்பு மரியாதை கொடுத்தாவது அந்த பொறுப்பு நம்மிடம் இருக்க வேண்டும். அதைவிட எனக்கு ரொம்ப மனசு வருத்தம். தமிழ்நாட்டைப் பற்றி பெருமைப்படுகின்ற நாம் எல்லோருமே ஒரு சில விஷயங்களை யோசிக்க வேண்டும். நான் பேசுவதைக்கூட அந்தம்மாவா அந்த அம்மா ஒரு பாப்பாத்தி அப்படித்தான் பேசும் என்பார்கள். நீங்கள் என்ன வேணாலும் சொல்லிக்கோங்க.
அதே மேடையில் இந்து அறநிலையத்துறையை காப்பாற்ற வேண்டிய அமைச்சரும் உட்கார்ந்திருக்கிறார். நீங்கள் ஒன்றும் வேறு ஒரு சமுதாயத்திற்கோ வேறொரு மதத்திற்கான அறநிலையத்துறையை காப்பாற்றுவதற்கான அமைச்சர் இல்லை. அங்கே இந்து பக்தர்கள், சனாதன பக்தர்கள் தான் பணத்தை உண்டியலில் போடுகிறார்கள். அது மட்டும் லட்டு மாதிரி இனிக்குதா? இதற்கெல்லாம் ரியாக்சன் இருக்கக் கூடாதுன்னு எதிர்பார்த்தால் தப்புங்க'' என்றார்.