சூதாட்டத்திற்காக மூர்க்கமாக வளர்க்கப்படும் கோழி மற்றும் சேவல்களை வைத்து ரகசிய சூதாட்டம் நடத்துவது தென் மாவட்டங்களில் ஃபேமஸ். ஆனால் அப்படி சண்டக் கோழிகள், சேவல்களைக் கொண்டு காட்டன் சூதாட்டம் போன்று இன்றளவும் இலை மறைவு காய் மறைவாக நடத்தப்படும் இந்த சூதாட்டத்திற்கென்றே, இவர்களால் கிராமப்புற காடுகளில் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நெல்லை, முள்ளிக்குளம் பாவூர்சத்திரம், சுரண்டைப் பகுதிகளில் இந்தச் சூதாட்டம் அமர்க்களப்படும். மேலும் இது போன்று சூதாட்டங்களில் சூதாட்டக்கார்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டுவதுண்டு லட்சத்தையும் தாண்டிய தொகைகளும் புரளுவதுண்டு.
அதற்குக் காரணமில்லாமல் இல்லை என்கிறார்கள், கிராமப்புறங்களில் நடக்கும் இந்த சூதாட்டங்களை பொழுதுபோக்கும் நோக்கில் பார்ப்பவர்கள். அமர்க்களப்படும் இந்தச் சூதாட்டச் சந்தைக்கு ஸ்பெஷல் கவனிப்பில் கோழிகளையும் சேவல்களை வளர்க்கிறார்கள். போட்டி மற்றும் ஆட்டத்திற்காக வைக்கப்படும் தொகைகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், வருமானம் பொருட்டு, உக்கிரத்தோடு மோதுவதற்காகவே, கோழிகளையும் சேவல்களையும் வளர்க்கிறார்கள்.
சூதாட்டச் சந்தையில் மோதுவதற்காக பல சேவல்கள் வளர்க்கப்பட்டாலும் வெறியோடு மோதுகிற சண்டக் சேவல்கள் கோழிகளுக்குத் தான் கிராக்கி. அதனைக் குறிவைத்தே வைக்கப்படும் சூதாட்டத் தொகைகள், பெட் கட்டுபவர்கள் கூட எண்ணிக்கையில் அதிகம்.
அதற்குக் காரணமில்லாமல் இல்லை. மோதும் சந்தைகளுக்கு சண்டக் கோழிகளையும் சேவல்களையும் கொண்டு வருவதற்கு முன்பே, அவைகள் ஒன்றுடன் ஒள்று மோதுவதின் நேரம் அதிகரிக்கவும் சளைக்காமலிருப்பதற்காகவும் அவைகளுக்கு ஊக்கமருந்து, சாராயம் அல்லது டாஸ்மாக் சரக்கு என இந்தப் போதைகளில் எதையாவது ஒன்றை அவைகளுக்குப் புகட்டி விட்டுத் தான் கொண்டு வருவர்கள் அதனால் சண்டையில் அவைகள் வெறியோடு மோதும்.
விஷயம், இது மட்டுமல்ல முக்கியமாக இன்னொரு பயங்கரமாக, அதன் கால்களில் கூர்மையான சிறிய கத்தி ஒன்றைக் கட்டிவிடுவர்கள் இவைகளை வளர்ப்பவர்கள். இப்படி தயாரிக்கப்பட்ட கோழிகள் சேவல்கள் ஏற்றப்பட்ட போதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ரத்தக்களறி ஏற்படும். இரண்டு தரப்பு சேவல்களும் ஒன்றுக்கொன்று உக்கிரமாக மோதிக் கொள்ளும் சமயம் ஏதாவது ஒன்று தாக்குதல் காரணமாக செத்து விழுவதும் உண்டு.
மேலும், இது போன்ற சூதாட்டத்தில் பார்வையாளர்கள் பணம் கட்டுபவர்களிடையே மோதலும் நடப்பதுண்டு அதனால் இரு தரப்பினர்களிடையே கலவரத்தையும் பற்ற வைப்பதுடன் சட்ட ஒழுங்குப் பிரச்சினை வரை கொண்டு போய் விடுவதும் நடத்திருக்கிறது. எனவே தான் இது போன்று பிராணிகளை வதை செய்து நடத்தப்படும் சூதாட்டம் கிரிமினல் குற்றம். அதன் காரணமாகவே இந்தச் சூதாட்டம் வெளியே தெரியாமல் நடத்தப்படுகிறது.
சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.
நெல்லை மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகில் உள்ள வென்னியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு அதன் பக்கமுள்ள ஆவரந்தாக்குளம் பகுதியில் ஒரு மாட்டுத் தொழும் உள்ளது. அங்கே அவர் சண்டக் கோழிகளை வளர்த்து வருகிறாராம் நேற்றையத் தினம் அந்தப் பகுதியில் சண்டக் கோழிகளை மோதவிடும் சூதாட்டம் நடந்திருக்கிறது. தகவல் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தெரியவர ரோந்து பணியிலிருந்த உதவி ஆய்வாளர்கள் மாணிக்கராஜ் ரெபின் உட்பட போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார்கள். சூதாட்டம் களைகட்டிய நேரத்தில் சென்ற போலீசார் அந்தப் பகுதிளை ரவுண்ட் செய்திருக்கிறார்கள். சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழப்பாவூரின் சுடலைகனி, சக்தி கிருஷ்ணன், பாவூர்சத்திரம் பகுதியின் டேனியல்ராஜ், வி.கே.புதுரின் சந்தனராஜ், சீதாராமன், ஆயிரப்பேரி அலிகார்கான், மயிலப்புரத்தின் ஜெயபால், மாதாபுரம், ராஜா முருகன் உள்ளிட்ட 11 பேர்களை வளைத்துப் பிடிதத்துடன், சூதாட்டத்தில் புழங்கிய தொகை. சண்டைக் கோழிகள், அவைகளுக்கு மோதலுக்காகக் கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ஊக்க மருந்து ஆகியவைகளைப் பறி முதல் செய்த போலீசார் கைதான 11 பேர்களின் மீது வழக்குபப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கோழிகள் குருமாவுக்குப் பயன்படுகின்றன.