






Published on 14/01/2023 | Edited on 14/01/2023
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருவிழாவின் முதல் நாளான போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றவாறு வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை எரித்துப் போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் போகிப் பண்டிகையை வரவேற்கும் விதமாக மேளதாளங்களை முழங்கிக் கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னை முழுவதும் புகை மண்டலமாகக் காணப்படுகிறது.