உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் என்பது இணையத்தின் மூலமாகவே அதிகம் நடைபெற்றுவருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நகர்ப்புறங்களில் இந்த இணைய வசதி அதிகம் கிடைக்கப்பெற்றாலும், குக்கிராமங்களில் இன்னும் இணைய வசதி முழுவதும் சென்றடையவில்லை. பொதுமுடக்க காலத்தில் மாணவர்கள் மரங்களின் கிளைகள் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளைப் பயின்ற சம்பவமே அதனை உணர்த்துவதற்குப் போதுமான ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில், கிராமங்களில் இந்தக் குறைப்பாட்டைப் போக்கும் வகையில் தற்போது பாரத் நெட் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களுக்கு சுமார் 1,815 கோடியில் இணைய வசதியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இன்று (20.10.2021) கையெழுத்தானது.