Skip to main content

சினிமாவை மிஞ்சிய கொள்ளை

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
சினிமாவை மிஞ்சிய கொள்ளை



மதுரை பொத்தானியபுரம் பாஸ்டின் நகரில் ஸ்ரீ விநாயகா பைனான்ஸ் நடத்தி வரும் புதுக்கோட்டை பொன்னமராவதி நகரை சேர்ந்த செந்தில்குமார் இவர் இங்கு 12 வருடமாக தொழில் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் மேலாளராக துவரங்குருச்சி அருகில் உள்ளது. கல்லுப்பட்டியை சேர்ந்த அழகு கோனார் மகன் பொன்னுச்சாமி கடந்த 8 வருடமாக இங்கு பணிபுரிந்து வருகிறார். 

கடந்த சுதந்திர தினம் அன்று கணக்கு பார்க்கையில் சுமார் ரூ8 லட்சம் குளறுபடி செய்ததை கண்டறிந்த செந்தில்குமார் கணக்கு கேட்க தனது நண்பர்கள் 6 பேரை போனில் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்குள் வரவழைத்து அங்குள்ள செந்தில்குமாரை தாக்கி முக்கிய ஆவணங்கள் பிரோவில் உள்ள பணம் ரூ 6 லட்சம் ரொக்கம் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். 

இது அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு Section.147,342, 408,506,379 வழக்கு பதிவு செய்து தனி பிரிவு போலீசார் இவர்களை பிடிப்பதற்கு தேடி சென்றுள்ளனர். இதை கண்டு இந்த ஏரியாவில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

-ஷாகுல்

சார்ந்த செய்திகள்