மாட்டிறைச்சி - இடைக்காலத் தடை நீட்டிப்பு
இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரும் வரை இடைக்காலத் தடை தொடரும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.