தேனியில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் முப்பெரும் விழாவிற்கு துணை முதல்வர் ஒபிஎஸ் வரவில்லை என்பதால் அவரது பேனர்களை கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனியில் இருந்து பெரியகுளம் சாலையில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பாக முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். கலந்து கொள்ள இருந்தார்.
இந்நிலையில் தான் பணி காரணமாக துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை தான் வருவார் என்ற தகவல் கிடைத்ததைக் கண்டு விழா நடத்துபவர்கள் டென்ஷன் அடைந்து தங்களது நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஏன்? வர மறுக்கிறார் என மருத்துவ நலச்சங்கத்தினர் ஏராளமானோர் ஒன்று கூடி தேனி பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்ட தோடு மட்டுமல்லாமல் அங்கு வைக்கப்பட்டிருந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேனர்களை அனைத்தையும் அடித்து கிழித்தனர். இச் சம்பவம் குறித்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி துணை முதல்வர் ஓபிஎஸ் தங்களது நிகழ்ச்சிக்கு மாலை உறுதியாக வருவார் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
ஆனால் துணை முதல்வரின் பேனர் கிழிப்பு சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.