Skip to main content

“சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்ரதையால் நடைபெற்றது”- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

திருச்சியிலுள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும்போது, அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கிணற்றில் இருந்து வெளியே குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின் 29ஆம் தேதி அதிகாலையில் சுஜித்தின் உடலை மீட்புக்குழு மீட்டது.
 

kadambur raju

 

 

சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதுமட்டுமல்லாமல் பல அரசியல் தலைவர்களும் சுர்ஜித்தின் குடும்பத்திற்கு நிதி வழங்கினார்கள். 

இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பழனிச்சாமியை விமர்சித்தார். இந்நிலையில் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசியுள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சுஜித்தின் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து அல்ல, தனி நபர் இடத்தில் பெற்றோரின் அஜாக்ரதையால் நடந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்