தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் திமுக பிரமுகர் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், அவருடைய நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தலுக்கு பிறகு சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதுவரை வெளிநாடுகளுக்கே சென்றதில்லை என்பதால் இலங்கை போகலாம் என்று தீர்மானித்து கட்சி நிர்வாகிள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர் பின்பு காலையில் உணவு சாப்பிட ஓட்டலின் கீழ் தளத்துக்கு போக ரெடியாகி உள்ளனர். அப்போது ஓட்டலின் கீழ்த்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
அந்த ஓட்டல் கட்டிடமே அதிர்ந்தது . ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குண்டு வெடிப்பின் போது தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது அதைப் பார்த்ததும் சுனாமி வந்து விட்டது என்று நினைத்தோம். அதுக்குப் பிறகு மக்கள் அலறியடித்து கொண்டு போயிட்டு இருந்தனர் . பின்பு ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச்சென்றனர், எங்களுக்கு என்னவென்று செய்வது அறியாமல் பயத்தில் இருந்தோம் . இந்த சம்பவத்தை அறிந்த கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு சம்பவத்தைப் பற்றி கேட்டு நலம் விசாரித்தார் . அதன் பிறகு எனது குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தோம்.கோவை வந்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது. எனது வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார் .