Published on 13/11/2019 | Edited on 13/11/2019
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில், செட்டி நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் 1034 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் காதி மற்றும் கைத்தறிதுறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசுகையில் "இளைஞர்கள் செல்போனை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு சில இளைஞர்கள் தனியாக நின்று தானாகவே பேசுகிறார்கள், தானாகவே சிரிக்கிறர்கள், ரோட்டில் யார் செல்கிறார்கள் என்று தெரிய மாட்டிங்கிறது. செல்போனினால் பல இளைஞர்கள் கெட்ட வழிக்கு செல்கின்றனர், செல்போனை கண்டு பிடித்தவனை கண்டால் மிதிக்க வேண்டும் போல் உள்ளது" என்றார். மேலும் அமைச்சர் மடிக்கணினியை மாணவர்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.