Published on 13/02/2019 | Edited on 13/02/2019
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பேனர்கள் வைக்க அனுமதியளிக்கவேண்டும் எனக்கோரி முன்னாள் எம்.பி. பாலகங்கா மனுஅளித்தார். இன்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பேனர்கள் வைக்க அனுமதிக்க இயலாது எனக்கூறியுள்ளது.
மேலும் சட்டவிரோத பேனர்களை அகற்றுவது மட்டும் அரசின் கடமை அல்ல, பேனர்கள் வைக்காமல் தடுப்பதும் அரசின் வேலைதான் எனக்கூறியுள்ளது. உத்தரவை மாற்றியமைக்க மறுத்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தமிழக அரசு மார்ச் 12க்குள் உத்தரவிடக்கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது.