Skip to main content

பாலாறு புல்லூர் தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் பாய்ந்து வரும் மழைநீர்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Balaru Pullur barrage is full and rainwater is flowing in Tamil Nadu Bala

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதே போன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே புல்லூர் பகுதியில் தடுப்பணை கட்டி உள்ளது. இந்த தடுப்பணை முழுவதும் நீர் நிரம்பி  உபரி நீரானது தற்பொழுது வினாடிக்கு 250 கன அடியாக வெளியேறி வருகிறது. 

 

இதன் காரணமாக தமிழக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாய்ந்து ஓடுகிறது. தற்போது திம்மம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர் கொடையாஞ்சி வாணியம்பாடி வழியாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்