Skip to main content

தமிழக அரசு தனி சட்டம் இயற்றி நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும்- கே. பாலகிருஷ்ணன்

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில்  கடந்த 11ம் தேதி வெகு விமர்சையாக சிவகாசி பட்டாசு தொழிலதிபர் இல்ல திருமணம் நடந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் ஆகமவிதிகள் மீறப்பட்டுள்ளது என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பக்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

chidambaram balakrishnan

 

 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளரும், சிதம்பரம் முன்னாள் சட்ட மேன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் அநியாங்கள், அட்டகாசங்களை சொல்லி மாலாது. கோவிலுக்கு நேரடியாகவும், தீட்சிதர்கள் மூலம் வரும் வருமானத்தை தீட்சிதர்கள் கணக்கு காட்டுவதில்லை. வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஆயிரங்கால் மண்டபத்தில்  பட்டாசு தொழில் அதிபர் திருமணம் நடத்த அனுமதித்துள்ளனர். தீட்சிதர்கள் பணத்தை வாங்கி கொண்டு கோவிலில் எதை செய்ய வேண்டுமானாலும்  அனுமதிப்பார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.  இதற்கு எந்த ஆகமவிதி அனுமதி கொடுத்தது, எந்த தீர்ப்பு இடம் கொடுத்தது. கோவிலில் திருமணம் நடப்பது வழக்கமான ஒன்று ஆனால் மரபுகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடந்தது தான் கண்டிக்கதக்கது. காசி விஸ்வநாதர் கோவிலில் நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அரசு தனி சட்டம் இயற்றி கோயிலை நிர்வகித்து வருகிறது. இது போல தமிழக அரசு தலையிட்டு இந்த கோயிலை நிர்வகிக்க வேண்டும். 


கோவிலுக்கு உள்ளே செல்லும் போது பக்தர்கள் தெரியாமல் காலில் செருப்பு அணிந்து சென்றால் அவர்களை மரியாதை இல்லாமல் வசைபாடி தாக்குதலில் ஈடுபடும் தீட்சிதர்கள். இந்த செல்வந்தர்கள் செருப்பு காலுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சென்றது  தெரியாதா? இது கோயில் மட்டும் அல்ல வரலாற்று ஆய்வுக்கான பொக்கிஷமாக உள்ளது. இந்த  இடத்தில் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்