15 வருடங்களுக்கு முன்பு திருச்சி என்.ஐ.டியில் தான் காதலித்த பெண்ணை ஆப்பிள் வெட்டும் சிறு கத்தியை வைத்து வகுப்பறைக்கு சென்று வெளியே அழைத்து வந்து நம்பிக்கை துரோகத்திற்கு நான் கொடுக்கும் பரிசு இதுதான் என்று மறைத்துவைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது திருச்சியில் சட்டகல்லூரியில் படிக்கும் மாணவி தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று என்னை ஏமாற்றின உனக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான் என்று பெட்ரோல் கேனுடன் சென்று தலையில் ஊற்றி எரித்த சம்பவம் பெ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பட்டீஸ்வரத்தை சேர்ந்த சுந்தரின் மகள் ரம்யா 23 இவர் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி காஜாமலையில் முஸ்லிம் 2-வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் சகதோழிகளுடன் தங்கி கல்லூரிக்கு சென்றுவருகிறார். இந்நிலையில் நேற்று பகலில் ரம்யா வீட்டில் இருந்துள்ளார். சக தோழிகள் 2 பேரும் அங்கிருந்தனர். வீட்டில் ரம்யா துணி துவைத்துக்கொண்டிருந்தார். மற்றோரு தோழி சக்தி வீட்டிற்குள் இருந்தார்.
அப்போது வீட்டிற்குள் வந்த ஒருவர் வந்து ரம்யாவை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னை ஏமாற்றின உனக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான் என்று பெட்ரோல் ஊற்றி ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலிலை எடுத்து ரம்யா மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச்சென்றார்.
இதனால் உடல் கருகிய நிலையில் ரம்யா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தோழிகள் ஓடி வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பலத்த தீக்காயமடைந்த அவரை ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 6 வது தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் ரம்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
சட்டக்கல்லூரி மாணவி ரம்யாவுக்கும் கும்பகோணத்தில் நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரோடு 2016 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அடுத்த சில மாதங்களிலே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில் ரம்யாவின் தோழியின் நண்பன் தான் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்தது என தெரியவந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் சந்திரபாடியை சேர்ந்த தவச்செல்வனை அவரது தோழி அறிமுகபடுத்தியிக்கிறார். அதன் பிறகு இரண்டு பேரும் நெருக்கமாகி இருக்கிறார்கள். இந்நிலையில் தவச்செல்வன் தான் ரம்யாவின் விவகாரத்துக்கு நீதிமன்ற உதவி முழுவதையும் தவச்செல்வன் தான் செய்து கொடுத்திருக்கிறார். விவகாரத்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தவச்செல்வன் சென்னையில் டிராவல் ஏஜெண்சியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அதன் மூலம் ஒரு பெரிய தொகை கிடைத்திருக்கிறது. அந்த பணத்தை வைத்தக்கொண்டு ரம்யாவுடன் பாஸ்போட் எடுத்து பிஜி தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அப்படியே ஆஸ்திரிலேயாவில் செட்டில் ஆக முடிவு செய்து அங்கவே தங்கி முயற்சி செய்திருக்கிறார்கள். பாஸ்போட் விசா பிரச்சனையில் செட்டில் ஆக முடியாமல் திரும்ப தமிழ்நாடு திரும்பியிருக்கிறார்கள்.
தமிழக திரும்பியதும் இரண்டு பேரும் திரும்ப ஊர் சுற்ற ஆரம்பித்து கடைசியில் தவமணியிடம் இருந்த பணம் எல்லாம் கரைந்து கொண்டே இருந்திருக்கிறது. இதற்கு இடையில் தவச்செல்வம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நெருக்கடி கொடுக்கவும் ரம்யாவோ நான் படிக்க வேண்டும் என்று சொல்லி திருமணத்தை தட்டிகழித்தவர். கடைசியில் தவசெல்வத்துடன் பேசுவதை தவிர்க்க ஆரம்பிக்கவும். ஆரம்பத்தில் சின்ன சண்டை தான் என்று நினைத்துக்கொண்டிருந்த தவசெல்வம் கடைசியில் ரம்யா தன் செல் நம்பர், தான் இருக்கும் இடம் என்று எல்லாவற்றையும் மறைத்து வாழ ஆரம்பித்திருக்கிறார்.
ரம்யா தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றதால் வேறு வழியில்லாம் ரம்யாவின் வீட்டிற்க சென்ற அவரது அம்மா அப்பாவிடம் போய் கல்யாணம் பண்ணி வைங்க என்று கெஞ்சியிருக்கிறார். அவர்களோ எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என் பொண்ணு என்ன சொல்லுதோ அதான் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் மீண்டும் ரம்யா இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்திருக்கிறார். திருச்சியில் தங்கியிருக்கும் இடத்தை தேடி கண்டிபிடித்து இந்தநிலையில் தான் தவச்செல்வன் தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறு ரம்யாவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் ரம்யா மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தவச்செல்வன் வீட்டிற்கு நேரடியாக வந்து ரம்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோலை ஒரு பாட்டிலில் ஏற்கனவே எடுத்து வந்து ரம்யா மீது ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதனால் ரம்யா 40 சதவீத தீக் காயத்துடன் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவல்களை ரம்யா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய முன்னாள் காதலன் தவச்செல்வனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவி ரம்யாவின் குடும்பத்தினர் தகவல் அறிந்ததும் அவரை பார்ப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாலை விரைந்து வந்தனர்.
திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.