Skip to main content

அழகிரியை சந்தித்த ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர்

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
அழகிரியை சந்தித்த ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் 
பால நமச்சி



நானும் ரஜினியின் தீவிர ரசிகன் அவர் அரசியலுக்கு வந்தால் எனது முழு ஆதரவும் உண்டு என முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மகனுமான அழகிரி கூறியதாக ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பால நமச்சி பேட்டி.

மதுரை சத்தியசாயி நகரில் உள்ள அழகிரியின் இல்லத்தில் அழகிரிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்ததாகவும் அப்பொழுது நானும் தீவிர ரஜினியின் ரசிகன் என்றும் அவரை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் அவரது உடல் நலம் பற்றி விசாரித்ததாகவும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதாகவும் ரஜினி அரசியலுக்கு வந்தால் தனது முழு ஆதரவும் உள்ளதாகவும் தெரிவித்ததாக ராமநாதபுரம் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் தெரிவித்தார். மேலும் இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசம் அள்ளிப்பதாக தலைமை ரசிகர் மன்ற தலைவர் சுதாகரிடம் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

-ஷாகுல்

சார்ந்த செய்திகள்