Skip to main content

'ஆடியோ சர்ச்சை... கைது செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது'- கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

 'Audio dispute...cannot be ordered not to arrest'- the court rejected the request!

 

அண்மையில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவர்களை சாதிப் பெயரை குறிப்பிட்டுப் பேசிய உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அவர் கல்லூரி நிர்வாகத்தின் மூலம் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தார்.

 

தமிழ்த்துறை தலைவர் அனுராதா கல்லூரி மாணவனிடம் பேசியதாக வெளியான ஆடியோவில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் அனுராதா 'நிறைய தப்பு நடக்குது இந்த துறையில... நீ நல்லபையன்னு எல்லாரும் சர்டிபிகேட் கொடுத்தாங்க அதான் உன்னிடம் கேட்கிறேன். நீ என்ன கம்யூனிட்டிபா' என கேட்க, மாணவன் ஒரு சாதியை குறிப்பிட்டு 'நான் அதுல வரேன் மேம்' என்று பதில் சொன்னான். அதற்கு 'அதான் மூஞ்சிலேயே எழுதி வைத்திருக்கு நீ தப்பு பண்ணமாட்டேனு. எந்த  கம்யூனிட்டியால பிரச்சனைன்னு உனக்கு தெரியுமா?' என அனுராதா கேட்க, 'புரியுதுங்க மேம்' என்றான் மாணவன்.

 

மேலும் மாணவர்கள் பலர் பெயர்களை குறிப்பிட்டு பேசிய அனுராதா, ஒரு மாணவன் பெயரையும், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரையும் குறிப்பிட்டு, 'அவன் அந்த சாதியா? அவனை நம்பலாமா? என கேட்க, 'அவன் அந்த கம்யூனிட்டியை சேர்ந்த மாணவன்தான் மேம் ஆனால் அவன் தவறுகள் செய்யமாட்டான் மேம்' என்றான் அந்த மாணவன்.

 

 'Audio dispute...cannot be ordered not to arrest'- the court rejected the request!

 

நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் நிகழ்ந்த இந்த சர்ச்சையை அடுத்து நீதியரசர் ராஜு அனுமதியுடன் அனுராதா மீதான பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்த்துறை தலைவரான அனுராதவை கைது செய்யக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரை கைது செய்யக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தொலைபேசி உரையாடலை எடிட் செய்து சக ஆசிரியர் ஒருவரின் தூண்டுதலால் உள்நோக்கத்துடன் இந்த புகார் கொடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அதுவரை அனுராதாவை கைது செய்யக்கூடாது என்ற கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்