Skip to main content

முதியவரை தாக்கிய வழக்கறிஞர்கள்! - வழக்கு பதிவு செய்துவிட்டு தவிக்கும் போலீஸார்..!

Published on 20/08/2018 | Edited on 27/08/2018
old


வேலூர் மாவட்டம், பெருமுகையை சேர்ந்தவர் 67 வயதான ராமதாஸ். அவரது மனைவி வனிதா. இருவரும் அவரது மகன் சுரேஷ் என்பவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சித்ரா, அவரது மனைவி ஜமீமா என்கிற ப்ரியதர்ஷினி. இவர்கள் ஏழைகளுக்காக வழங்கப்படும் அரசின் விலையில்லா அரிசியை வாங்கி கடத்துகிறார்கள் என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்துகிறார்கள் என போலீஸாரிடம் நீங்கள் கூறினீர்கள் என ராமதாஸ் குடும்பத்தின் மீது கோபம் தொடர்ச்சியாக சண்டைப்போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16.8.2018ந்தேதி ராமதாஸ் அவரது மனைவி வனிதா, மருமகள், பேத்திகள் இருந்தபோது, கறுப்பு பேன்ட், வெள்ளை உடை அணிந்து வந்த 4 பேர் ராமதாஸ் வீட்டு முன் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். எதற்காக வீட்டின் முன் நிற்கிறீர்கள் என வனிதா கேட்டபோது, கொச்சையான வார்த்தைகளில் பேசியவர்கள், தெருவில் தானே நிற்கிறோம் என பேசியுள்ளனர்.

அவர்கள் பேசிய பேச்சை கேட்ட ராமதாஸ், என்னங்க இப்படி பேசறிங்க எனக்கேட்டதும், நீங்கதான் பக்கத்து வீட்ல இருக்கறவங்களோட தகராறு செய்யறதா எனக்கேட்டபடி தாக்கியுள்ளனர்.

அதோடு அதில் ஒருவர் விரல்களில் ஒரு வளையத்தை மாட்டிக்கொண்டு தாக்கியுள்ளார். தலையில் இருந்து ரத்தம் கொட்டி அவரது உடைகள் நனைந்துள்ளன. வலித்தாங்காமல் கத்திய ராமதாஸ்சின் குரல் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது மருமகள் வள்ளி வர அவரையும் மோசமாக பேசியுள்ளனர். உடனடியாக அந்த தெருவில் இருந்த இளைஞர்கள் திரண்டு வர அந்த 4 பேரும் தப்பியோடியுள்ளனர். அந்த இளைஞர்களே, மருத்துவமனையில் கொண்டும்போய் அவரை சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக ராமதாஸ் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் தந்தவர் ஸ்டான்லி ராஜன் என்பவரின் தலைமையில் 4 பேர் வந்து தாக்கினார்கள். அவர் அந்த வீட்டுக்கு உறவினர் என்கிற முறையில் அடிக்கடி ஆட்களை அழைத்து வருவார். அதுமட்டும் தான் தெரியும், மற்றப்படி அவரைப்பற்றி தெரியாது என்றுள்ளார். அதன் அடிப்படையில் அடையாளம் தெரிந்த முகவரி தெரியாத 4 பேர் மீது 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி காவல் நிலையத்தில். வழக்கு பதிவு செய்தபின் அவர்கள் யார் என போலீஸார் விசாரிக்க, 4 பேரும் வழக்கறிஞர்களாக உள்ளார்கள் என தெரியவர போலீஸ் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்