Published on 26/03/2025 | Edited on 26/03/2025

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த (மார்ச்) மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளனர். அதே சமயம் ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். எனவே இவர்களுக்கான மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.