Skip to main content

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் 12ம் தேதி போராட்டம்!

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம்
12ம் தேதி போராட்டம்!



சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் இன்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றுது, இந்த சந்திப்பில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவிந்தரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கல்வி கட்டணத்தை குறைத்திட கூறி சிதம்பரத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை அழைத்து பேசி பிரச்சனைக்களுக்கு தீர்வு காண வேண்டும். நீட் தேர்விலிருந்து. தமிழகத்தில் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நிரந்திர விலக்கு வேண்டும்.

தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தை சேர்ந்ததவர்களுக்கு ஓதுக்கீடு செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவ கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் ஓதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு அவசர சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தனியார் நிகர் நிலை மருத்துவ பல்கலைகழக மருத்துவ இடங்களில் 50% மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் நீட் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அவற்றுக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. முதுநிலை மருத்துவ கல்வி, உயர் சிறப்பு கல்லூரியிலும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஓதுக்கிட்டை வழிங்கிட இந்திய மருத்துவ கழக விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் வரும் 12ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்