Published on 13/12/2021 | Edited on 13/12/2021

திருச்சி மாநகர காவல் நிலையப் பகுதிகளில் இளைஞர்களுக்குப் போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடத்தப்பட்டுவருகின்றன. நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய மிளகுபாறை பகுதியில் இளைஞர்களுக்குப் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கண்டோன்மெண்ட் காவல் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமை ஏற்று அறிவுரை வழங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட திட்ட அலுவலர் மருத்துவர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இளைஞர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் சார்ந்த கருத்துகளையும், போதைக்கு எதிராக போராடுவதற்கான அறிவுரைகளையும் வழங்கினார்.