Published on 23/11/2020 | Edited on 23/11/2020

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அந்த விழாவில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடர்வதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக இருந்தது. இந்நிலையில், பழனி தொகுதியை பா.ஜ.கவுக்கு ஒதுக்குங்கள் என அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பழனி தொகுதியை நிச்சயம் பாஜகவிற்கு கொடுக்க வேண்டும், அதுவே எங்களின் வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.