Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு - படங்கள்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தின. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். 
 

அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணை முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

பின்னர் மாலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

அரசாணையைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது..
 


 

சார்ந்த செய்திகள்