ஏகாதிபத்திய எதிர்புக் கருத்தரங்கம்
புதுக்கோட்டை, செப்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஏகாதிபத்திய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் உரையாற்றினர். நகரச் செயலாளர் சி.அன்புமணவாளன் நன்றி கூறினார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, என்.பொன்னி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், வி.துரைச்சந்திரன் மற்றும் எம்.ஜியாவுதீன், எம்.பிரவாகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
-இரா. பகத்சிங்