இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனை கொலை செய்த விவகாரத்தில், இறந்தது டில்லிபாபு என முடிவு செய்திருந்த நிலையில், மேலும் புதிராக அந்த உடல் ஆணே இல்லை பெண் என டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்து மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பரை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சுரேஷ் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி குடிசை வீடு எரிந்ததில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக, சுரேஷின் உடலை காவல்துறை உடற் கூறாய்வு முடித்து அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்துள்ளனர். அதே செப்டம்பர் மாதத்தில் இருந்து டில்லிபாபு கானவில்லை என டில்லிபாபு தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எண்ணூர் போலீசாரை அலைகழித்துள்ளனர். அதன் பிறகு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீண்டும் எண்ணூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டன்ர். அந்த விசாரணையில், இறந்தவர் சுரேஷ் இல்லை, டில்லிபாபு எனத் தெறியவந்தது. மேலும், தான் வாங்கிய 1 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக நாடகமாடி தன்னுடைய நண்பனே கொலை செய்து எரித்தாக அவர்களே ஒப்புக்கொண்டதின் பெயரிலே இந்த வழக்கு முடிவுக்கு வந்ததுள்ளது.
இல்லை என்றால் இந்த வழக்கு ஒரு தற்கொலை வழக்காவே போலீசாரால் முடித்துவைக்கப்பட்டு இருக்கும். மேலும் இப்படி தற்கொலை வழக்காவே முடித்து வைப்பதற்காகவே ஒரத்தி போலீசார் செயல்பட்டு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் டில்லி பாபுவின் பிரேதம் தானா என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. இறந்துபோனதாக சொல்லப்படும் சுரேஷ் பிரேதத்தின் மீது விசாரணை செய்த ஒரத்தி போலீசாரும், பிரேதப் பரிசோதனை செய்த செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும், இறந்துபோன சடலம் சுரேஷ் என்பவருடையதுதான் என்பதை உறுதி அளித்து அன்றே சான்று வழங்கியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் டி.என்.ஏ சோதனையின் மூலமாக இறந்தவர் ஆண் இல்லை, பெண் என டி.என்.ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுஎ்ளது. உண்மையில் இறந்து போனது யார்? அது யாருடையை உடல்? எதற்காக இப்படி நாடகம் ஆடினார்கள்? எனக் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை ஐனவரி 31 ஆம் தேதி வந்த நக்கீரனில் இன்சூரன்ஸ் கொலை? போலீஸ் - மருத்துவர் கூட்டுச்சதி? எனத் தெளிவாக வெளியிட்டிருந்தோம். தற்போது அது வெட்ட வெளிச்சாமாகி உள்ளது. அப்படி என்றால் டில்லிபாபு எங்கே உள்ளார்? இந்தப் பெண் உடல் யார்? எதற்காக குற்றவாளிக்கு காவல்துறையும், மருத்துவரும் துணை போனார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் குற்றவாளி வாய் திறந்தாலே உண்மை வெளிச்சத்திற்கு வரும் .