



Published on 20/11/2021 | Edited on 20/11/2021
சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழக - கர்நாடக கூட்டு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. அது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவி ஆனி ராஜா தலைமைச்செயலாளரை பிற்பகல் 12:30 மணியளவில் சந்தித்தார். சந்திப்பின் போது நீண்ட கால கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது குறித்து மனு அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.