அனிதா மரணத்திற்கு நியாயம் கேட்டு
ஜல்லிக்கட்டு ஆதரவுக்குழுவினர் போராட்டம்
கோவை நஞ்சப்பா ரோட்டில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தின் மீது ஜல்லிக்கட்டு ஆதரவுக்குழுவினர் அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் மேம்பாலத்தின் மீது ஊர்வலமாக சென்றனர். காந்திபுரம் கிராஸ் கட் ரோடு அருகே வந்தபோது பொதுமக்களிடம் வேடிக்கை பார்க்காதீர்கள் தெருவில் இறங்கி போராட வாருங்கள் என அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் போராடிய மாணவர்களை போராட்டத்தை கைவிட்டு கைதாகுமாறு கூறினர்.
இதை ஏற்காத மாணவர்கள் காவல்துறையினரிடம் அமைதியாக போராட வ.உ.சி மைதானத்தை கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இன்று அனிதாவிற்கு ஏற்பட்ட நிலை நாளையாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மத்திய , மாநில அரசுகளின் அலட்சியத்தால்தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொணடதாகவும் குற்றம் சாட்டினர்.
-அருள்