Published on 31/05/2022 | Edited on 31/05/2022
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் ரயில்வே இணை அமைச்சரும், பாமக தேர்தல் பணிக்குழு தலைவருமான ஏ.கே. மூர்த்தி, பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
பாமக தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வந்த பாமக தலைவர் அன்புமணி, அந்தவரிசையில் இன்று ஆளுநரைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.