திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சேர்ந்த புவனேஸ்வரி என்கிற பெண்ணை விசாரணை என்கிற பெயரில் தாக்கிய பெண் உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விட்டுக்கட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி இவருக்கும் ஆலத்தம்பாடியை சேர்ந்த மகேஸ்வரிக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மகேஷ்வரி புவனேஷ்வரி மீது ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உதவி பெண் ஆய்வாளர் மகாலெட்சுமி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனது மகளின் சிகிச்சைக்காக இருந்த புவனேஸ்வரியை விசாரணை என்று கூறி அழைத்து வந்து மகாலெட்சுமி கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் சந்தித்து புவனேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். பிறகு உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
மகாலெட்சுமி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதால் இன்று காலை 10. மணியளவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த 300க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
அங்கு வந்த காவல்துறையினருக்கும் மாதர் சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது துணை கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் இன்னும் 10 நாட்களில் விசாரணை மேற்கொண்டு மகாலெட்சுமி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.