Published on 08/05/2020 | Edited on 08/05/2020
![amak m.rakeshwari priya report](http://image.nakkheeran.in/cdn/farfuture/pc5nC4ERZwbVck5sfgG6okPop4Pqxxd4k9hY5y6BGfA/1588961892/sites/default/files/inline-images/ADfcvd.jpg)
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுனவர் மூ.ராஜேஸ்வரிபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு சரியானது. அதேசமயம் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கப்பட்டால் பல விளைவுகள் ஏற்படும் . அப்படி விற்கப்படும் போது மது டெலிவரி செய்யப்பட்ட முகவரியில் குடும்ப தகராறில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அரசு A1 குற்றவாளியாக பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா?
மது வேண்டும் என்று மது பிரியர்கள் யாரும் போராடவில்லை. அரசு வருமானத்திற்காக மட்டுமே டாஸ்மாக் கடைகளை திறந்தது. ஆகையால் அரசு எல்லா குற்றங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். மதுவிலக்கிற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளர்.