Published on 20/11/2019 | Edited on 20/11/2019
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2020- ஆம் ஆண்டு ஜனவரி 19- ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடைசியாக இந்தாண்டு மார்ச் 10- ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.