Skip to main content

முதல்வர் நிகழ்ச்சியில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்! செய்தியாளர்கள் அனைவரும் வெளிநடப்பு!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

All journalists walk out from CM campaign


கரூர் வாங்கல், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் உழவன் திருவிழா விவசாயிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பழனிசாமி வருகைக்கு முன்பாக வாழைத்தார்களை எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் செயல்களை, செய்தியாளர் ஒருவர் புகைப்படம் எடுக்கும்போது, அதிமுக நிர்வாகி ஒருவர் அவரது செல்ஃபோனை பறித்து வைத்ததுடன், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரைத் தாக்கியுள்ளார்.

 

மேலும், நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால், நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசியுள்ளனர். நிகழ்ச்சியை வீடியோ எடுக்கும்போது கேமராவை பறித்துவிடுவோம் எனவும், இந்த இடத்தை விட்டு நகர முடியாது எனவும் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்தனர். இவ்வாறு அங்கு நடைபெற்ற பல்வேறு முறையற்ற சம்பவங்களைக் கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

 

மேலும், அவர்கள் ஏற்பாடு செய்த வாகனத்தையும் புறக்கணித்து பேருந்து நிறுத்தம்வரை நடந்துசென்று சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பினர்.


 

 

சார்ந்த செய்திகள்