Published on 16/01/2021 | Edited on 16/01/2021
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாலமேடு, அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நடைபெறுகிறது. கரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் துவங்கிவைத்தனர்.
காலை 8 மணிக்கு துவங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 655 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். வீரர்களை மிரளவைக்கும் வேகத்தில் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிபாய்கின்றன. அவற்றை பிடிக்கும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. குறிபாக சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் எடப்பாடி.பழனிசாமி சார்பில் கார் பரிசலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.