அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் ராமமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு புகார்களை முன்வைத்தார். அவர் பேசுகையில்,
பச்சோந்தி வெட்கப்படும் அளவிற்கு ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைப்பார். பணம் சம்பாதிப்பார். அவர் வன்னிய சமுதாய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ஒரு சொட்டு ரத்தம் கீழே விழுந்தாலும் அவதாரம் எடுத்து வன்னிய சமூகத்தை காப்பாற்றுவேன் என்கிறார் ராமதாஸ். அவர் சமூகத்திற்காக அவதாரம் எடுக்கமாட்டார். அன்புமணிக்கு ஏதும் நடந்தால் அவதாரம் எடுப்பார். ராமதாஸ் தினம் தினம் வெறும் அறிக்கைவிடுகிறார். காகிதப்புலியாக இருக்கிறார் ஆனால் ஒருநாள் கூட இந்த சமுதாயத்தை சேர்ந்த 25 பேர் இறந்தார்களே அவர்களுக்கு இதுவரை எதாவது உதவி செய்திருக்கிறாரா.
25 பேர் இறந்து போனதற்கு வெள்ளை அறிக்கை கொடுங்க என்று கேட்கிறோம். இதுவரை அதற்கு பதிலில்லை. நான் மாணவப்பருவதில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்திலேயே அப்போது நான்தான் வழக்காடி வெளியே வந்தேன். நான் முடிந்தவரை இந்த சமூக மக்களுக்கு போராடி வருகிறேன். ஆனால ராமதாசும் அவரது மகனும் இந்த சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்துவருகின்றனர். இவர்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள் விரல் விட முடியுமா?
இந்திய பொருளாதாரத்தை மட்டுமல்ல தமிழக பொருளாதாரத்தையே முடக்கும் திட்டங்களை போட்டவர்கள் இவர்கள். விமானநிலைய விரிவாக்கம், துணைநகரம் வரக்கூடாது, அனல்மின் நிலையம் 40 ஆயிரம் கோடியில் 11 ஐந்தாண்டு திட்டத்தில் கலைஞர் இங்கே கொண்டுவந்தார் ஆனால் என் பிணத்தின் மீதுதான் கொண்டுவர முடியும் என சொன்னார் ,க்ரீன் ஏர்போர்ட் என பொருளாதார திட்டங்களையும் வேண்டாம் என்று சொன்னார். அவ்வளவு ஆர்ப்பாட்டம் அழிச்சாட்டியம் செய்தார் ராமதாஸ் செய்தார் எனக்கூறினார்.