Published on 29/05/2019 | Edited on 29/05/2019
தமிழகத்தில் நடந்து முடிந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வெற்றிபெற்றது.

நேற்று சபாநாயகர் தனபால் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் பதவியேற்ற நிலையில் இன்று தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் சபாநாயகர் அறையில் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.