Published on 15/09/2022 | Edited on 15/09/2022

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காப்பாற்றிய அதிமுக பதவி வெறி பிடித்த எடப்பாடி பழனிசாமியால் சீரழிவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை ஒட்டி கோவையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பதவி வெறி பிடித்த சிலரின் கைகளில் சிக்கிச் சீரழிந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். எடப்பாடி பழனிசாமி மீது வெறுப்பு ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல் திமுக மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்களின் மேல் தொடர்ந்து வரிச்சுமை அதிகரிக்கின்றனர். இதற்கு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர்” எனக் கூறியுள்ளார்.