Skip to main content

வேளாண் திருத்த சட்டம்; ஆட்சியாளர்களின் மனசாட்சிக்கு தெரியும் - SDPI நாகை மாவட்ட தலைவர்

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

agri ordinances bill nagai SDPI party

 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கிடப்பில்போட வலியுறுத்தி SDPI கட்சி, சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்றியமையா பொருட்கள் திருத்த சட்டம் 2020, வேளாண் விளைபொருள்  விற்பனை மற்றும் வணிக மேம்பாடு எளிமைப்படுத்தும் சட்டம் 2020, உழவர்களுக்கான விலை உறுதி மற்றும் பன்னை சேவை ஒப்பந்த சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. இந்த சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவருகிறது.

 

அந்தவகையில் வேளாண் அவசர திருத்த சட்டத்தை கண்டித்து நாகப்பட்டினம் தபால் நிலையம் அருகில் SDPI நாகை மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு SDPI கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடியே சட்ட நகல்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

இதுகுறித்து SDPI நாகை மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் கூறுகையில், “சாதாரண அடிப்படை சிந்தனைக்கூட இல்லாமல் கடிவாளம் கட்டிய குதிரையை போல, மத்திய மோடி அரசு கொண்டுவரும் ஒவ்வொரு ஆபத்தான சட்டங்களுக்கும் ஏகோபித்த ஆதரவை தெரிவிக்கும், மாநில எடப்பாடி அரசு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேளாண்மை திருத்த சட்டத்திற்கும் முதல்வரிசையில் நின்று முழு ஆதரவைத் தெரிவித்து, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. டெல்டா மாவட்ட அமைச்சர்களும்கூட விவசாயிகளின் நிலை அறியாமல் இந்த சட்டத்தில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என நா கூசாமல் பொய் சொல்கின்றனர். இந்த சட்டத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்பது அவர்கள் மனசாட்சிக்கு தெரியும். பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்படி ஒரு பொய்யை சொல்லி விவசாயிகளை கார்ப்ரேட்டுகளிடம் அடமானம் வைக்க துடிக்கிறார்கள், இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக சட்டத்தை கிடப்பில் போடவேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாநிலக் குழுவுக்கு அதிகாரம்; எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயற்குழுவில் தீர்மானம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
SDPI State Executive Committee to empower state committee to form alliance in parliamentary elections

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று(12.2.2024) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநிலச் செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.  இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. மேலும், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது, தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.