![admk mla must come to chennai on oct 6 th admk party head order](http://image.nakkheeran.in/cdn/farfuture/_3xMe66sC8nasjtz4-Vmu3fdTer8bAtyKqwFcsf67pY/1601622209/sites/default/files/inline-images/admk%20%281%29.jpg)
அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வரும் அக்டோபர் 6- ஆம் தேதி சென்னை வர கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7- ஆம் தேதி அ.தி.மு.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்.இடையே மோதல் உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் துணை முதல்வர் மற்றும் முதல்வரை மாறி மாறி சந்தித்து, அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர்.மு. தம்பிதுரை சந்தித்தார். அதேபோல் தமிழக முதல்வரை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்தார்.