Skip to main content

குரங்கணி காட்டுத்தீயில் 40 கல்லூரி மாணவர்கள் சிக்கி தவிப்பு- 7 மாணவிகள் மீட்பு

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
kurangani

 

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கனி மலைப்பகுதி அருகே கொழுக்கு மலையில்  திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் ஈரோடு , கோவையைச்சேர்ந்த 40 கல்லூரி மாணவ, மாணவிகள் சிக்கி தவிக்கின்றனர்.

இதில், முதற்கட்டமாக 7 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.  இரவு நேரம் என்பதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  மீட்புபணியில் தேனி மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், தீயணைப்பு படையினர் , குரங்கணி வனப்பகுதியினர் உள்ளிட்ட 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளார்.

இது துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் இருக்கும் வனப்பகுதி.   கடந்த 4 நாட்களாக இந்த காட்டுத்தீ  பரவி வனத்தையே அழித்து வருகிறது.
 

சார்ந்த செய்திகள்