![admk minister dindigul seenivasan](http://image.nakkheeran.in/cdn/farfuture/BRuIVZw9be-3iCon3pNMpsbZKseF2-irb6sp8ZXsn18/1601481910/sites/default/files/inline-images/cfsadfsfswfrew.jpg)
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் ஒன்றிய பகுதிகளான கோவிலூர், பாரைப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, மீனாட்சி நாயக்கன்பட்டி உள்பட 14 கிராமங்களில் கழிவு நீரோடை, சிறுபாலம், சிமெண்ட் சாலை போன்ற அபிவிருத்தி பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. அடுத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சிதான். அதில் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஒன்றாக இணைந்து வருகின்ற 7 ஆம் தேதி அறிவிப்பார்கள்.
இந்த ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் நடத்திய கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ் கலந்து கொள்ளாதது குறித்து கேட்ட கேள்விக்கு, வேலையின் காரணமாக முதல்வர் நடத்திய கூட்டத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவில்லை எனத் தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.