
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயப்பாளையத்தில் தனியார் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை நிர்வாகம் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்திய மாணவ, மாணவிகள் அங்குச் சேர்ந்த குப்பைகளை சாக்குப்பையில் போட்டு சுமந்தபடி, வெளியே சாலையோரம் கொண்டுபோய் கொட்டி உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாடப் புத்தகங்களை கையில் எடுக்கும் பள்ளி மாணவர்களை பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த சொல்லி குப்பைகளை சாக்குப்பையில் போட்டு சுமந்தபடி வெளியே சாலையோரம் கொட்டுமாறு கூறிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறைக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.