ஓபிஎஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்புகள்!
பிளவுபட்ட இரு அணிகள் நேற்று இணைந்ததை அடுத்து ஓபிஎஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், திட்டம், பாஸ்போர்ட், சட்டமன்றம் மற்றும் தேர்தல் உள்ளிட்ட துறைகளுக்கான கூடுதல் பொறுப்பு துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆளுநரின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மேற்பார்வையின் கீழ் இருந்த சில முக்கிய துறைகளின் பொறுப்புகள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.