Published on 05/11/2019 | Edited on 05/11/2019

விஜய் ரசிகர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது கிருஷ்ணகிரி நீதிமன்றம்.
பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி கேட்டு ரகளை செய்த விஜய் ரசிகர்களில் 28 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். கைது செய்யப்பட்ட 50 பேரில் 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன். கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தினமும் காலை 09.30 மணிக்கு கையெழுத்திட 28 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவு. மேலும் ரகளையின் போது சேதப்படுத்திய ரூபாய் 98,000 மதிப்புடைய பொருள்களுக்காக சுமார் 1,50,000 அபராதம் விதிக்கப்பட்டது.