
நடிகர் ரஜினிகாந்தின் கட்சியில் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.
ஜனவரியில் கட்சித் தொடங்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனையும் அறிவித்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.