தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றுவருகிறது. காலை வாக்குப் பதிவு துவங்கிய சில நிமிடங்களில் எல்லாம், திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள், முக்கிய அரசியல்வாதிகள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், தனது போயஸ் தோட்டம் வீட்டிலிருந்து வாக்களிக்க புறப்பட்ட நடிகர் ரஜினிக்கு அவரது மனைவி லதா, ‘பாத்து உஷாரா வாக்களிங்க. கடந்த 2011 தேர்தல் அப்ப, நீங்க வாக்குப் பதிவு பண்ணது மீடியாவுல வந்து அது பெரும் சர்ச்சையானது. உங்கள் விருப்பம் போல் யாருக்கு வேண்டுமென்னாலும் வாக்களிங்க. ஆனால், பாத்து உஷாரா வாக்களிங்க’ என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
அதேபோல் இன்று காலை வாக்களிக்க ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வந்த ரஜினியை மீடியாக்களும் ரசிகர்களும் சூழ்ந்துகொண்டனர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை வாக்குச் சாவடிக்குள் அழைத்து சென்றனர். அங்கு வாக்கு ஏந்திரத்திற்கு முன் நடிகர் ரஜினி நின்றபோது மீடியாக்களும் ரசிகர்கள் சிலரும் அவருக்கு அருகே செல்ல முயன்றனர். அதனால், சில நிமிடங்கள் அவர் வாக்களிக்காமல் காத்திருந்து அருகே வந்தவர்களை தள்ளிபோக சொன்னார். காவல்துறையினரும் அவர் அருகே வர முயன்றவர்களை விலக்கிவிட தான் வாக்களிப்பதை யாராவது பதிவு செய்கிறார்களா என்பதை கவனித்துவிட்டு பின் தனது வாக்கினை பதிவு செய்தார்.